அந்த நேரம் முதற்கொண்டு And From That Time 59-12-31E பிரன்ஹாம் கூடாரம், இந்தியானா,ஜெபர்ஸன்வில் 1. திரும்பி வந்து போதகர் சகோதரர் அவருடைய சிறு பெண்ணோடு தேவனுடைய கிருபையைப் பற்றின சாட்சியைக் கூறக் கேட்டது நிச்சயமாக நன்மையாக இருந்தது. அதைப் போன்ற காரியங்களை கர்த்தராகிய இயேசு செய்ததைப் போன்றே அது உள்ளது, நிச்சயமாக அப்படியாய் இருக்கிறது. 2. இப்பொழுது இன்றிரவு நம்மோடு விருந்தினர்களில் ஒருவராய் சகோதரன் ஏர்னி பான்டலர் (Ernie Fandler) அவர்கள் இருப்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறோம். நாம் இந்தக் கூட்டத்தைப் புதிய வருட இரவன்று உள்ள ஜெப ஆராதனை என்று அழைக்கிறோம். இவர் என்னுடைய அருமையான ஒரு நண்பர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மனம் மாறியவர்களில் இவர் கிருபையின் ஒரு பரிசுக்கோப்பையான ஒருவர் ஆவர். 3. அவர் சுவிட்ஜர்லாந்தை சேர்ந்தவர் அங்கிருந்து வந்தவர் அவரோடு ஒரு சகோதரன் உண்டு என நினைக்கிறேன். அவர்கள் இப்பொழுது சவானோவில் (Shawano) ஜீவிக்கிறார்கள் ஒரு ஜெர்மானியர் ஒரு சகோதரன் வாட்டர்ஸ் ஆவர் இன்றிரவு அவர்களை நம் மத்தியில் வைத்திருக்க எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. 4. மட்டுமல்லாமல் நம்மோடு இன்றிரவு விசுவாசத்தின் ஒரு விலையேறப்பெற்ற சகோதரன் டேவிட் ட்யூப்லஸ்ஜின் (David duPlessis) தென் ஆப்பிரிக்காவிலிருந்தும் வந்திருக்கிறார். அவர் நம்மோடு இருப்பது கூட நமக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. 5.டேவிட்டும் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம் அல்லது ஜெபித்துக் கொண்டிருந்தோம் வருகின்ற வருடத்தில் ஆப்பிரிக்காவுக்குள்ளும் உலகத்தின் பல வித்தியாசமான பாகங்களில் ஒன்று சேர்ந்து எங்களுக்கு தேவன் ஒரு மகத்தான வேலையைக் கொடுத்திருக்கிறார். 6. அதைக்குறித்துப் பேசும்படியாகவும் அதன் பேரில் ஜெபிக்கும்படியாகவும் இப்பொழுதிலிருந்து திங்கள் வரை சகோதரன் டேவிட், இப்பொழுது இங்கே இருக்கிறார். ஆப்பிரிக்காவிலும் உலகத்தின் மற்ற பாகங்களிலும் எங்கே எப்பொழுது என்பதை தீர்மானிக்கும் படியாய் இங்கே வந்திருக்கிறார். 7. பெந்தெகொஸ்தே உலக கன்வன்ஷனில் சகோதரன் டேவிட் மிகவும் முக்கியமான அலுவலகத்தை உடையவராயிருக்கிறார். மட்டுமல்லாமல் மகத்தான மதத் தலைவர்களுடன் உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டவர். 8. நாம் அறிந்திருக்கிறபடி இயேசு கிறிஸ்துவின் சரீரத்தை எல்லா ஸ்தாபனங்களிலிருந்தும் ஒன்று கூட்டிக் கொண்டு வருவதில் உதவவும் வருந்திக் கொண்டு வரவும் முயற்சிக்கவும் அதிக செல்வாக்குள்ளவராக இருக்க அவர்களுக்கு எந்த விதமான சபை இருக்கிறது அல்லது அவர்கள் எந்தப் பெயர் பெற்றிருக்கிறார்கள் என்பது பாதகமில்லை. அது அது தான். யாருக்காக கிறிஸ்து மரித்திருக்கிறாரோ அந்த சபை. 9. நான் அதை அடிக்கடி நினைப்பேன் அங்கே வெளியே மேற்கே அநேகமுறை மாட்டு மந்தையை வழக்கமாக வளைத்து மடக்குவோம். நாங்கள் உயரே போவோம் சகோதரன் டேவிட்டும் அங்கே போய் உட்காருவோம் அங்கே அவர்கள் வடிகால் வேலிமட்டுமாய் அவர்கள் மாட்டு மந்தையை ஓட்டி மலைகளுக்கு உயரே மேய்ச்சலுக்கு ஓட்டுவார்கள். அங்கே காட்டின் பசும்புல்லை.., அவைகள் மேயும். 10. அந்த நேரத்தில் அடிவாரத்தில் புல் காட்டுப்புல் வளர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் அந்த புல்லை அறுத்து குளிர்காலம் முழுவதற்குமாய் உயரே மலைகளில் பனிப்புயல் வீசுகையில் மாட்டு மந்தையைப் போஷிப்பார்கள் 11. அங்கே வழக்கமாக சேனத்தின் மேல் உட்கார்ந்து அந்த மந்தையை அவர்கள் மடக்குவதை கவனித்துக் கொண்டிருப்பேன் ஒவ்வொரு பெரிய பண்ணையும் அடிவாரத்தில் ஒரு டன் (ton) எடையுள்ள வைக்கோலை தயார் செய்வார்கள் அவர்களால் மட்டும் ஒரு ஐம்பது டன் வைக்கோல் எடுக்க முடிந்தால் அவர்களால் ஐம்பது மாடுகளை சமாளிக்க முடியும் என்று அர்த்தம் ஒரு ஆயிரம் டன் எடுக்க முடிந்தால் ஆயிரம் மாடுகளை அவர்களால் சமாளிக்க முடியும். 12. ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மாடுகளின் மேல் ஒரு வியாபாரக் குறியை வைத்திருப்பான் அவர்கள் அந்தக்குறியை கவனிப்பார்கள் நிச்சயமாக வித்தியாச மான பண்ணைகள், அதனால் அவைகள் கலக்க போய் விட முடியாது. 13. பண்ணையாளனுக்கு எந்த விதமான குறியிட்டவைகள் போகின்றது என்பதை பற்றி அவனுக்கு அக்கறையில்லை. ஏனென்றால் எல்லாவிதமான குறியிட்ட வைகளும் அங்கே இருக்கின்றது ஆனால் அங்கே ஒரு காரியத்தை மட்டும் அவன் உண்மையாகவே சோதிக்க வேண்டியவனாயிருக்கிறான். அதென்னவென்றால் அதனுடைய இரத்தச் சீட்டு அவைகள் அதனதன் ஜாதிகள் ஹீரப்போர்ட் என்று பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவைகளினால் கதவின் வழியாக உள்ளே நுழைய முடியாது அவர்கள் ,அவைகளை திருப்பி விடுவார்கள். புரிகின்றதா? 14. அந்த விதமாகத்தான் நியாயத்தீர்ப்பில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாம் எந்த விதமாக அணிந்து கொண்டிருக்கிறோம் என்ற குறியை அல்ல ஆனால் அந்த இரத்தச்சீட்டு (Blood tag) இருக்கிறதா என்று கவனிக்கப்படும். அந்த காரியம் தான் அங்கே கனிப்புக்கு வரும். இரத்தச்சீட்டு.... 15. சகோதரன் டேவிட் நமது மத்தியில் இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி, சற்று முன்பு சகோதரன் எஸ்டல்பீலர் (ESS Beeler) அவர்களை நான் இங்கே பார்த்தேன். அங்கே எங்கேயோ பின்னாக எழும்பினதை நான் பார்த்தேன் இன்றிரவு செய்தியைக் கொடுக்க நாம் கேட்க வேண்டிய மற்ற ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள். மட்டுமல்லாமல் சகோதரன் ரட்டலும் (Ruddell) மற்றவர்களும் வருவார்கள் என்று யூகிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் நல்லிரவு மட்டுமாய் இங்கே இருக்கப்போகிறார்கள். 16. எப்படியாய் இருந்தாலும் சகோதரன் டேவிட் நான் நல்லிரவு மட்டுமாய் இருக்க முடியாது. அவர் எல்லா இடத்திலும் தேவைப்படுகிற ஆள் அவர் இங்கே இருக்கிறார் என்று சகோதரன் ரோஜர்ஸ் (Rogers) கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவர் ஆள் அனுப்பி அவரை அங்கே பத்து மணிக்கு வரும்படி சொல்லுவார். எனவே அப்படியானால் அவர் சீக்கிரத்தில் இங்கிருந்து அங்கே தூரத்தில் தென்லூயிவில்லுக்குப் போய் விடுவார். 17. சகோதரன் டேவிட் அவர்களுக்கு சரியென்றால் அவர் இங்கே மேலே வந்து அவருடைய இருதயத்தில் இருப்பதை நம்மோடு பேசினால் நமக்காக பிரசங்கித்தால் கர்த்தர் அவருக்குள் வைக்கும் எதையாவது செய்தால் அது அருமையாயிருக்கும் என்று நான் நினைத்தேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்துள்ள சகோதரன் டேவிட் ட்யூப்லஸ்ஸிஸ் அவர்கள் பேச நாங்கள் யாவரும் கேட்க விருப்பமாயிருக்கிறோம். 18. நான் இதைக் கூற விரும்புகிறேன். அதாவது அங்கே ஆப்பிரிக்காவில் இருந்த பொழுது கர்த்தர் எங்களுக்குக் கொடுத்ததான அந்த மகத்தான கூட்டங்களில் அவருடைய சகோதரன் சகோதரர் ஜஸ்டஸ் (Justus) எனக்கு மொழிப்பெயர்ப்பாளராக இருந்தார். அவருடைய பெயர் சகோதரன் ஜஸ்டஸ் என்று நான் நினைக்கிறேன் 19. இந்த ட்யூப்லஸ்ஸிஸ் (duPlessis Brothers) சகோதரர்கள் ஒரு உண்மையான அருமையான குடும்ப ஜனங்களாக இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே ஊழியக்காரர்கள் என்று நான் நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த மட்டில் ஒருக்கால் அவருடைய தகப்பனாரும் கூட ஒரு ஊழியக்காரர் என யூகிக்கிறேன். அவர்கள் ஒரு அருமையான குடும்பத்தில் இருந்து வந்த ஜனங்கள் உலகத்தைச் சுற்றிலுமுள்ள எல்லா சபைகளிலும் ஸ்தாபனங்களிலும் ஒரு மகத்தான பெயரை உடையவர்களாய் இருக்கிறார்கள். 20. சகோதரன் டேவிட் இப்பொழுது நீர் வந்து எங்களுக்காகப் பேச வேண்டும். அல்லது தேவன் கூறும்படி எதை உம்முடைய இருதயத்தில் போட்டாலும் அதை கேட்க நான் விரும்புகிறேன் இப்பொழுது நேராக வாருங்கள். இன்றிரவு உம்மை என்னுடைய சபைக்கு அறிமுகப்படுத்த நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன் 21. இது தான் எங்களுடைய போதகர் சகோதரன் ஆர்மன் நெவில் (Orman Neville) சபையாருக்கு என்னுடைய அருமையான நண்பர்களில் இவர் ஒருவர் தேவனுடைய சேவையிலே உடன் போர் வீரர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சகோதரன் டேவிட் ட்யூப்லஸ்ஸிஸ் இவரே. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரன் டேவிட். 22. ஆமென். நாங்களெல்லாரும் ருசித்தோம் சகோதரன் டேவிட் இப்பொழுதே திரும்பிப் போய் மீண்டும் எங்களோடு இரும். அது மிகவும் அருமையாயிருக்கிறது, நிச்சயமாக நாங்கள் சந்தோஷமாயிருக்கிறோம். சகோதரன் டேவிட் சில காரியங்களைக் கூறினார் என்னிடத்தில் பேனா இருந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும் நாங்கள் அவைகளை குறித்து வைத்திருப்பேன், ஆனால் பேரன்கள் பேரப்பிள்ளை இவைகள் எப்பொழுதும் நினைவில் இருக்கும். 23. நல்லது நம்முடைய சகோதரன் இங்கு வந்ததை நாங்கள் நிச்சயமாய் பாராட்டுகிறோம். அவர் பெந்தெகொஸ்தே விசுவாசிகளின் உலக மாநாட்டுடன் சம்மந்தங்கொண்டவர் அவருடைய வேலையின் பாதையிலே உலக முழுவதின் ஊடாகவும் ஒரு மகத்தான மனிதன். இன்றிரவு சகோதரன் டேவிட் வந்து நம்முடன் இந்த புது வருட இரவன்று பேசினதற்கு நாம் அதிர்ஷ்டசாலிகளாயிருக்கிறோம் நம்முடையக் கர்த்தரைக் குறித்து மகத்தான மனிதர் என்ன நினைக்கிறார்கள் என்றும் அவருடைய மகத்தான ஊழியக்காரனைக் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்றும் உங்களால் காணமுடியும். 24. இப்பொழுது நாளைப் புதிய வருட நாளாயிருப்பதினால் இப்பொழுது அது ஒரு சில மணி நேரங்களாயிருக்கும் நான் விடியற்காலையில் புறப்பட வேண்டும். எனவே சகோதரன் நெவிலுடன் சரியென்றால் சிறிது நேரம் நான் பேசலாம் என்று நினைத்தேன். சகோதரன் பீலரும் மற்ற ஊழியக்காரர்களும் இங்கிருக்கிறார்கள். 25. அதிக நேரம் எடுக்கமாட்டேன் என்று நான் நினைக்கிறேன் நாம் ஆமென் என்று சொல்லி வீட்டிற்கு போகலாம் என்று அது ஒரு அற்புதமான செய்தியாயிருக்கும் இன்றிரவு நமக்கு இங்கு என்ன இருக்கிறது என்பதற்காக நாம் கர்த்தருக்கு நன்றி உள்ளவர்களாயிருக்கக்கூடும் 26. இப்பொழுது இது புதிய வருட இரவாய் இல்லாதிருந்தாலும் தேவனுடைய இராஜ்யத்தினால் நாம் ஒருவரை ஒருவர் உபசரிக்கிறோம் புதிய வருடம் வரும் வரைக்குமாய் பிரசங்கிக்கிறோம் 27. நாளானது பிறப்பதற்கு முன்னதாகவே விடியற்காலையில் எழும்பிவிடுவோம் நான் டேவிட்டைப் போல் அவ்வளவு வாலிபன் அல்ல ஒரு வேளை அவர் வாலிபமாய் உணர்வது போன்று நான் உணராமல் இருக்கலாம் டேவிட் என்னைக் காட்டிலும் சற்று வயது அதிகமானவர் ஏழு அல்லது எட்டு வயது என்னைக் காட்டிலும் மூத்தவர் ஒருக்கால் பத்து இருக்கலாம். ஆனால் உண்மையான அவர் தேவனுக்கு ஒரு அக்கினி பந்தமாய் இந்த வருடம் ஐம்பதாயிரம் மைல் கல் தேவனுடைய இராஜ்யத்திற்காக பிரயாணம் செய்கிறார். 28. இப்பொழுதும் கூட அவருடைய பிரசங்க பாதையில் சகோதரன் ராஜர்ஸும் இடம் போகிறார் நாளைக்கு அவர் வேறு யாரோடோ இருக்கப்போகிறார். வேறு எங்கேயோ, வேறு எங்கேயோ வேறு எங்கேயோ வேறு எங்கேயோ சென்று திங்கள் அன்று மீண்டுமாய் இங்கே வருவார் வந்து கொண்டிருக்கின்ற ஒரு உலக முழுவதுமாக உள்ள பிரயாணத்திற்கான ஒழுங்குகளை செய்யும்படியாய் நான் அவரை சந்தித்தாக வேண்டும். 29. நாங்கள் மார்ச் மாதத்தில் ஆப்பிரிக்காவில் இருக்க வேண்டும் இந்த பிற்பகல் தான் அதை அறிந்து கொண்டேன். வருகின்ற மார்ச்சில் முழு சுவிசேஷ கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் சபையை சேர்ந்த க்ளேட்டன் சேன்மோர் அவர்களை இந்த வாரத்தில் அல்லது வருகின்ற வாரத்தில் முதல் கட்டமாக அவரை சந்தித்து ஜமைக்கா ஹெய்ட்டிக்கான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும். 30. அடுத்த வாரம் நான் கென்டக்கிக்கு போவேன் அல்லது ஜியார்ஜியாவுக்கும் சென்று அந்த கூட்டங்களை அங்கே நடத்துவேன் அப்படியே நேராக கென்டக்கி வழியாக திரும்பி வந்து இங்கே ஒரு இரவு அங்கே ஒரு இரவாக அந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ளுவேன். 31. அங்கேயிருந்து நேராக திரும்பி வீட்டிற்கு வந்து அங்கிருந்து அட்லாண்டிக் நகரத்திற்கு சென்று இருபத்தி ஏழாம் தேதி முதல் முப்பதாம் தேதி வரை அங்கிருந்து ஒன்றாம் தேதி காலையில் புறப்பட்டு கிங்ஸ்டன்னில் துவங்கி ஜமைக்காவில் ஓட்டப் பந்தய சாலையில் அந்த நாள் முதல் ஒரு பத்து நாட்களுக்கு அங்கே இருப்பேன் அங்கேயிருந்து புறப்பட்டு ஹெய்ட்டிக்கு எங்கேயெல்லாமோ அங்கிருந்து எங்கேயோ போவோமென்று எங்களுக்கே தெரியாது, கர்த்தர் எங்களை நடத்துகிற விதமாய் செல்வோம். 32. இவைகளெல்லாம் இப்பொழுது தயாராகிக் கொண்டிருக்கும் கட்டத்தில் இருக்கிறது. புரிகின்றதா? நான் இன்னும் சரியென்று கூறவில்லை டேவிட் இங்கே இருக்கிறார்... க்ளைட் வருகிறார் சகோதரர் கார்டன் லின்ட்சே தென் அமெரிக்காவிற்கு வருகிறார் இன்னும் மற்றவர்கள். லத்தீன் பாஷையிலே பேசுகிற அமெரிக்கர்களுக்கு கிறிஸ்தவ வியாபார புருஷர்கள் வருகிறார்கள் சகோதரன் டேவிட் சுவிட்ஜர்லாந்த் ஜெர்மனி நாடுகளுக்கு இப்படியாக. 33. ஆனால் இன்னும் எங்களுக்கு தெரியாது நீங்கள் ஜெபித்துக் கொண்டேயிருங்கள் நான் மேலாய் அறிந்திருக்கும் அளவிற்கு தேவன் போ என்று சொல்லும் வரைக்குமாய் நான் எங்கேயும் போக விரும்பவில்லை ஆகையினால் நான் போகும் படியாய் உணர்ந்தாலொழிய போக மாட்டேன் பின்னால் நான் ஆகாயக் கப்பலை விட்டு இறங்குகிறபொழுது எதிர்ப்பு என்னவாயிருந்தாலும் அக்கறையில்லை நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறேன் என்று நான் கூறலாம். 34. எங்களுக்கு ஒன்று சேர்ந்து உண்டாயிருந்த நட்பிற்காக நான் டேவிட் அவர்களுக்கு நன்றி உள்ளவனாயிருக்கிறேன் ஏனென்றால் அந்த மனிதன் ஒரு முக்கியமான மனிதனாயிருக்கிறார் ஆனால் இந்த கர்த்தருடைய ஊழியத்தை அவர் நிச்சயமாய் விசுவாசிக்கிறார். அவர் நிச்சயமாய் விசுவாசிக்கிறார் சகோதரன் டேவிட்டும் நானுமாய் எங்களுடைய பெயர்கள் இந்த உலகம் முழுவதின் ஊடாகவும் ஒன்று சேர்ந்து செயல்படுகிறது . 35. அதைப்போன்றதான ஒரு மனிதனோடு தொடர்பு வைத்திருப்பதற்காக நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். ஆனால் நண்பர்களே நான் அதைப் பாராட்டுகிறேன். அதனால் தொடர்பு கொண்டிருப்பதில் நான் மிக மகத்தான காரியமாய்க் கருதுவது அந்த மகத்தான ஒருவரான தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறது. 36. இப்பொழுது சகோதரன் நெவிலும் அவர்களில் சிலரும் இன்னும் சில வினாடிகளில் பேசுவார்கள் ஆனால் இப்பொழுது நான் வேதவாக்கியத்தில் இருந்து ஏதோ ஒரு சிறிய காரியத்தை வாசிக்க விரும்புகிறேன் 37. பலவிதமான பிரசங்கிமார்களையும் அவர்கள் ஒரு பொருளை அனுகுகின்ற விதத்தையும் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது முதலானவைகளை ஒரு புதிய வருட நாளில் காண்பது அது நல்லது என்று நான் நினைக்கிறேன் ஒவ்வொரு மனிதனும் பிரசங்கிப்பதில் அவனுடைய சொந்த பாணியை உடையவர்களாய் இருக்கிறார்கள் உங்களுக்குத் தெரியும் தேவன் நம்மெல்லாரையும் ஒரே மாதிரியாய் உண்டாக்கவில்லை அவர் நம்மை வித்தியாசமானவர்களாய் உண்டாக்கினார். 38. உருவத்தோற்றத்தில் அவர் நம்மை வித்தியாசமாய் உண்டாக்கினார் அவர் உலகத்தை பல விதங்களாய் உண்டாக்கினார். பெரியமலைகள் சிறியமலைகள் புல் வெளிகள் பாலைவனங்கள் பெரிய வெள்ளைப்பூக்கள், நீலப்பூக்கள் பல வித்தியாசமான விதங்கள் அவர் நம்மை வித்தியாசமானவர்களாய் உண்டாக்கி இருக்கிறார் அவ்வளவு தான். 39. அவர் சிவப்பான தலைகள் கருப்புத்தலைகள் பழுப்புத்தலைகள் வெள்ளைத் தலைகள் பருமனாக, ஒல்லியாக, உயரமாக இன்னும் என்னவெல்லாமாகவே உண்டாக்கியிருக்கிறார் புரிகின்றதா? அவர் நம்மை வித்தியாசமானவர்களாய் உண்டாக்கியிருக்கிறார். 40. தேவன் பல ரகங்களின் தேவனாயிருக்கிறார் நான் அதை ஒரு விதமாய் விரும்புகிறேன் உங்களுக்கு அப்படி இல்லையா ஆனால் எல்லா நேரத்திலும் அதே மாறாதவராயிருக்கிறாரா? என்னே என்னே நான் அதை விரும்புகிறேன். 41. எனவே இப்பொழுது நாம் நம்முடைய வேத வார்த்தைகளை பரிசுத்த மத்தேயுவின் புத்தகத்திற்கு திருப்புவோம் பரிசுத்த மத்தேயுவின் சுவிசேஷம் நான்காம் அதிகாரம் ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் வாசிக்க விரும்புகிறேன் தேவன் நமக்கு உதவி செய்கிறார் பரிசுத்த மத்தேயு நான்காம் அதிகாரம். 42. நான் விசுவாசிக்கிறேன் வாசிப்பதற்கு முன்பாக நாம் ஜெபிப்போம் கிருபையுள்ள பரலோகப் பிதாவே அது மீண்டுமாக நன்றியுள்ள இருதயத்தோடு இந்த புதிய வருடத்தை நாங்கள் அனுகுகிறோம் நாங்கள் உம்மை அனுகி எங்களுடைய கடந்த கால கவலைகளையெல்லாம் நாங்கள் உம்மிடத்தில் கொண்டு வந்து அவைகளை எல்லாம் நீர் மறதி கடலிலே போட்டுவிட்டு இனி அவைகளை ஒரு போதும் எங்களுக்கு எதிராக எங்களுடைய பாவங்களை நினையாதிருக்கும்படி நாங்கள் உம்மிடத்தில் கேட்கிறோம். 43. எங்களுடைய ஆவிக்குரியவைகளோடு நாங்கள் பரிசோதித்துப் பார்க்கப்படுவது மட்டுமல்லாமல் உம்மோடு எங்களுக்குள்ள ஐக்கியத்தையும் பரிசோதித்துப் பார்ப்போமாக. எங்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னிப்பீராக உம்முடைய ஆவி இன்றிரவு எங்களோடு இடைபடும்படியாக நாங்கள் கேட்டுக்கொள்ளுகிறோம். 44. எங்களைக் குறித்து ஏதாவது அசுத்தமான காரியம் அங்கே இருக்குமானால் கர்த்தாவே மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ அந்த தூரத்திற்கு அதை கொண்டு போய் விடும் நாங்கள் இந்த புதிய வருடத்திற்குள் சுத்தமாகவும் ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் கழுவப்பட்டு ஆயத்தமாய் இந்தப் புதிய வருடத்திற்கு உள்ளாய் நாங்கள் பிரவேசிக்கும்படியாய் அதை மறதி கடலுக்குள் எறிந்து எங்களுக்கு எதிராக இனி அதை நினையாதிரும். 45. நாங்கள் உமக்கு சேவை செய்கிறதிலேயே இந்த 1960-ம் வருடம் மிகவும் மகத்தானதாய் இருப்பதாக எங்களுக்கு மகா மேன்மையாயும் அபரிமிதமாயும் தருவீராக. 46. இப்பொழுது இருக்கப் போகின்ற இந்த எல்லாக் கூட்டங்களிலும் கர்த்தாவே சகோ. ட்யூப்லஸ்ஸிஸ் அவர்களோடு உலகம் முழுவதுமாக ஆசியாவிற்குள்ளும் ஐரோப்பாவிற்குள்ளும் சுற்றிலும் நடந்து நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டங்களில் கர்த்தாவே உம்முடைய சித்தமும் உம்முடைய வல்லமையும் இந்தக் காரியங்களை நடத்துவதாக. 47. உம்முடைய தெய்வீக நியமிக்கப்பட்ட பாதையை விட்டு எந்த நேரத்திலாவது விலகினால் பரிசுத்தாவியானவர் தாமே ஒரு தடையைப்போட்டு எங்களை நிறுத்தி கர்த்தாவே எங்களை சரியான இடத்திற்கு திருப்புவீராக இதை அருளும். 48. இந்த சிறுசபையை ஆசீர்வதியும் கர்த்தாவே சுமார் முப்பது வருடங்களுக்கு நெருக்கமாக இது இங்கே இப்பொழுது ஒரு தாழ்மையான ஜனத்திற்கு தேவனுடைய கிருபையின் ஒரு நினைவு கூறுதலாக அது நிற்கிறது. போதகராகிய சகோ.நெவில் பிதாவே அவரை நீர் ஆசீர்வதிக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம் சபை முழுவதையும் ஆசீர்வதியும். 49. தர்மகர்த்தாக்களையும் டீக்கன்களையும் பாடல் தலைவனையும் பியானோ வாசிப்பவரையும் சபையார் யாவரையும் ஒவ்வொருவரையும் ஞாயிறு பள்ளி உபாத்திகளையும் இன்னும் உள்ளவைகளையும் ஆசீர்வதியும் கர்த்தாவே நாங்கள் தேவனுடைய கிருபையில் இந்த வருடம் வளருவோமாக நம்முடைய அங்கத்தினர்கள் அதிகமான எண்ணிக்கையிலும் உம்முடைய கிருபையிலும் கடந்த வருடங்களைக் காட்டிலும் வளருவார்களாக இதை அளியும் பிதாவே. 50. இப்பொழுது நாங்கள் வாசிக்க இருக்கின்ற உம்முடைய வார்த்தை இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் அனுகுகையில் எங்களுக்கு உதவி செய்யும். கர்த்தாவே உம் ஒருவரால் மட்டுமே வியாக்கியானிக்க முடியும் தேவனுடைய இராஜ்யத்தின் நிமித்தமாக இதை எங்களுக்கு நீர் அளிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 51. அடுத்த சில நிமிஷங்களுக்கு நான் பேசுவதற்காக நான் தெரிந்து கொண்ட சந்தர்ப்பத்தை அறிவிக்கிறேன் அது இங்கே வேத வார்த்தைகளில் காணப்படுகின்றது. நான் அதை வாசிக்கிறேன் நான் அதை ''அந்த நேரம் முதற்கொண்டு,'' என்று அழைக்க விரும்புகிறேன். 52. நான் யோசிக்கவே இல்லை அன்றொரு இரவு நான் சொன்னேன் நான் இங்கே வருவதாக இல்லை ஏனென்றால் என்னுடைய தொண்டை புண்ணாகிக் கொண்டு இருந்தது. நேற்றோ அல்லது முந்தின நாளோ என்னுடைய மனைவி என்னிடத்தில் அப்படியானால் நீர் சபைக்கு போகமாட்டீர் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினாள் அதற்கு நான் தேனே நான் போவேன் என்று நினைக்கவில்லை என்னுடைய தொண்டை அவ்வளவு பச்சை புண்ணாகவும் இருக்கிறது என்றேன். 53. பின்னர் அதற்கு மேல் அன்றிரவு வேறொன்றுமில்லை நான் உட்கார்ந்து வேத வார்த்தைகள் எடுத்த போது நான் இதைப் பார்த்தேன் சகோ.சாத்மன் அப்பொழுது வந்து நாளை இரவு நீர் சபைக்கு வருவீரா என்றார் நான் ஆம் நான் அங்கே இருப்பேன் என்றேன். 54. மேடா என்னை சுற்றும் முற்றும் பார்த்து என்னால் உம்மை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றாள். அதற்கு நான் அதை உன்னிடத்தில் எதிர்பார்க்கவில்லை அல்லது வேறு யாரிடத்திலும் எதிர்பார்க்கவில்லை தேவனுடைய ஆவியினால் நடத்தப்படுகின்ற எந்த ஒருவனையும் புரிந்து கொள்ள முடியாது. 55. நம்முடைய கர்த்தர்... அவர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை அவர் காணப்பட்ட விதம் ஒரு நிமிடம் அவர் ஒருவிதமாய் பேசினார் இன்னொரு நிமிடம் அவர் இன்னொரு விதமாய் பேசினார். வேறு எங்கேயோ அவர் வேறு எதையோ குறித்துப் பேசினார். சில நேரங்களில் அது இயேசுவானவர் பேசுகிறதாயிருக்கும் சில நேரங்களில் அது தேவன் பேசுகிறதாயிருக்கும். உங்களுக்குப் புரிகின்றதா-? 56. சீஷர்களும் கூட அங்கே கடைசியில் கூறினார்கள் இதோ இப்பொழுது நீர் வெளிப்படையாய்ப் பேசுகிரீர் இப்பொழுது நாங்கள் அறிந்து கொண்டோம் என்றார்கள் புரிகின்றதா-? இயேசு அவர்களுக்கு இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? என்றார் பாருங்கள். அதற்குப் பின்னர்.., 57. உங்களால் அதைச் செய்ய முடியாது ஏனென்றால் நீங்கள் ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள் ஏதோ காரியத்தை நீங்கள் செய்யத் துவங்குகிறீர்கள் பின்னர் தேவன் உங்களை வேறு எங்கேயோ உபயோகிக்க விரும்புகிறார் என்பதை நீங்கள் கண்டறிகிறீர்கள் நீங்கள் அங்கே நிறுத்தியாக வேண்டும் இங்கே போக வேண்டும் ஆவியினால் நடத்தப்படுகிறீர்கள் நீங்கள் தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டுமென்று விரும்புகின்ற தான ஒரு ஜீவியத்தை உடைய வித்தியாசமான வினோதமான ஜனங்களாய் இருக்கிறீர்கள். 58. பின்னர் நான் எப்பொழுதும் இதை சொல்வதுண்டு அதாவது காத்தருக்கு இது சித்தாமாயிருந்தால் நான் இதை செய்வேன் என்று புரிகின்றதா-? நான் யாருக்காவது ஒரு வாக்களித்திருந்தால் கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் நான் அதை செய்வேன் என்பேன். 59. பாருங்கள் ஆகையினால் அப்பொழுது அது தேவனுக்கு சித்தமாய் இல்லையென்றால்.., கர்த்தருக்கு சித்தமாயிருந்தால் நான் இந்தச் செய்தியைப் பேசுவேன். இந்தச் செய்தியில் இருக்கையிலேயே கலிபோர்னியாவுக்கு போகும் படியாய் அவர் எனக்கு ஒரு அழைப்பைக் கொடுக்கலாம் நான் எல்லாவற்றையும் ஒரு புறமாய் ஒதுக்கிவிட்டு என்னால் முடிந்த அளவு வேகமாய் கலிபோர்னியாவுக்கு செல்வேன். 60. நான் அந்த விதமாக ஜீவிக்க விரும்புகிறேன். எந்த காரியமும் என்னைப்பற்றிப் பிடித்து வைத்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை மகத்தான ஏதோ காரியம் அல்லது வேறேதோ எனக்குத் தேவையில்லை அங்கே அது லட்சக்கணக்கான டாலர்கள் பெருமானமுள்ளதாயிருக்கலாம் என்னை அங்கே கட்டிவைக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் இவ்வளவு பணம் பெற்றாக வேண்டும் எங்கே எப்பொழுது நான் இருக்க வேண்டுமென்று தேவன் கூறுகிறாரோ அங்கே நான் போய் நீங்கள் போகலாமென்று நான் கூறும்வரைக்குமாய் அங்கே இருக்க நான் விரும்புகிறேன் நான் அங்கே போக விரும்புகிறேன் யாருக்கும் ஏதும் கடமைப்பட்டவனாய் அல்ல. 61. இப்பொழுது இதோ இங்கே இருக்கிறது குறிப்பிடப்பட்டிருக்கிறது ஜெர்மனிக்கு அல்லது ஆப்பிரிக்காவிற்கு செல்வது ஏதோ கோடீஸ்வர ஸ்திரீ ஆப்பிரிக்காவிற்கு நான் போக வேண்டுமென்பதை ஆவியானவர் என்பேரில் போட்டது முதற்கொண்டு அவள் நான் அதற்கு பொருப்பேற்று அதன் எல்லா செலவுகளுக்கும் நான் பணம் செலுத்துகிறேன் என்றாள். புரிகின்றதா-? அவ்வளவு தான் என்னுடைய பிதா எல்லாவற்றிற்கும் சொந்தக்காரராக இருக்கும் பொழுது நான் ஏன் பணத்தைக் குறித்தும் காரியங்களைக் குறித்தும் கவலைப்பட வேண்டும். 62. புரிகின்றதா-? இந்த ஐசுவரியவானோடு அல்லது அந்த ஐசுவரியவானோடு அல்லது இந்த ஜனத்தோடு அல்லது அந்த ஜனத்தோடு அவரால் பேச முடியும். நான் அதைக் குறித்துக் கவலைப்பட அவசியமே கிடையாது புரிகின்றதா? தேவன் அதையெல்லாம் பார்த்துக் கொள்ளுகிறார் சகோ.ராய் அந்த விதமாய் தான் ஜீவிக்க வேண்டும் அவர் அதைப் பார்த்துக் கொள்ளும்படி விடுங்கள் அது அவ்வளவு நன்மையாய் இருக்கும். 63. இப்பொழுது நம்முடைய வேத வார்த்தைகளில் நான்காம் அதிகாரத்திற்குத் திருப்புவோம். நாம் பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷத்தின்படியாய் 4-ம் அதிகாரம் 12-ம் வசனம் முதல் வாசிக்கத் துவங்குவோம். (மத்தேயு: 4: 12-17) யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளி லிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர் நகூமிலே வந்து வாசம் பண்ணினார். கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் நிறைவேறும்படி இப்படி நடந்தது அது முதல் இயேசு; மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 64. நான் இப்பொழுது அந்த நேரம் முதற்கொண்டு என்ற பொருளின் பேரில் பேச இருக்கிறேன் உங்களுக்குத் தெரியும் மானிடர்கள் என்ற முறையில் நாம் எல்லாரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து தான் காரியங்களை நினைக்கிறோம் இன்னின்ன ஒரு காரியம் சம்பவித்தது அந்த நேரம் முதற்கொண்டு என்று. 65. இப்பொழுது அநேக நேரங்களில் நீங்கள் ஒரு வயதான மனிதனை அல்லது ஒரு வயதான ஸ்திரீயை சந்திக்கிறீர்கள் அவர்கள் ஏதோ காரியம் சம்பவித்ததான ஒரு கடந்த நேரத்தை சுட்டிக் காட்ட விரும்புவார்கள். அவர்களால் அதை நன்றாக தெளிவு படுத்திச் சுட்டிக்காட்டி அது அந்த நேரத்தில் சம்பவித்தது என்று கூற முடியும். 66. இப்பொழுது இன்றிரவு பார்க்கப்போனால் எல்லாருமே இருக்கிறோம். என்னால் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சம்பவித்த குறிப்பிட்ட காரியங்களை என்னுடைய நினைவிலிருந்து அழைக்க முடியும். அந்த நேரம் முதற்கொண்டு ஏதோ காரியம் மாறிப்போனது. 67. இன்னின்ன காரியம் அந்த நேரத்தில் சம்பவித்தது. அந்த நேரம் முதற்கொண்டு அது வித்தியாசமாயிருந்தது அது நம்மால் முடிந்த ஒரு நல்ல காரியம். 68. அந்த நினைவுகளில் சில நாம் சிந்தித்துப் பார்க்கின்ற காரியங்களில் அப்படி மாறிப்போன தகுதியான காரியங்களாயிருக்கிறது அங்கே சில காரியங்கள் இருக்கின்றன அது சிந்தித்துப் பார்ப்பதற்கு அவ்வளவு தகுதியானவைகள் அல்ல. 69. உதாரணமாக ஒரு ஸ்திரீ துர்க்கீர்த்தியானவளாய் இருந்து அவள் அங்கே ஒரு நேரமிருந்தது நான் ஒரு நல்ல நீதியுள்ள நேர்மையுள்ள பெண்ணாயிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இரவன்று அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காரியம் சம்பவித்தது என்று அவள் கூறலாம். 70. அந்த நேரம் முதற்கொண்டு அவள் தவறான பாதையில் சென்றாள். அவளுடைய ஜீவியம் பாவத்தால் கருமையினால் இருளினால் பழுதடைந்து நியாயத்தீர்ப்பு மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த நேரம் முதற்கொண்டு அது சம்பவித்தது அப்பொழுது அவள் தவறான பாதையை எடுத்தால் என்பதை அவளால் நினைவு படுத்த முடியும். 71. குடிகாரன் இன்றிரவு வீதியின் மேல் அவனுடைய துன்பங்களைக் குடித்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறான் நீங்கள் அவனைத் தூக்கி எடுக்கலாம் சில காலத்திற்கு குடிக்கார ஜனங்களுக்கான ஒரு மகத்தான மையம் இங்கே நியூயார்க்கில் இருந்தது அந்த பௌரியில் நான் பார்த்த.., 72. நான் ஒரு குறிப்பிட்ட ஊழியக்காரரோடு நடந்து போய்க் கொண்டிருந்தேன். அங்கே ஒரு மனிதன் விழுந்து கிடந்தான் ஓ அநேகர் அங்கே இருந்தனர். தொல்லை கொடுக்காதவர் உதவியற்றவர்கள் அவர்களுடைய ஆடையின் முன்பாகமெல்லாம் நனைந்து போய் முகமெல்லாம் தாடி மயிர் வளர்ந்தவர்களாய் ஒரு பயங்கரமான நிலையில் அங்கே படுத்துக்கிடந்தார்கள் அவர்கள் பரிபூரணமாய்த் தீங்கிழைக்காதவர் களாயிருந்தார்கள். 73. அந்த ஊழியக்காரர் அந்த ஆளைத் தெரிந்து கொண்டு அவனிடத்தில் கேளுங்கள் என்றார். மோட்டார் வாகனத்தின் பம்பரின் மேல் ஒரு காலை வைத்தவாறு படுத்துக் கிடந்த இந்த மனிதன் அருகில் சென்றேன் அவனுடைய தலையோ வீதியின் மேல் கிடந்தது சில சமயங்களில் அங்கே இருக்கின்ற கழிப்பிடங்களுக்குக்கூட போக முடியாதவர்களாயிருப்பார்கள். ஓ அவன் பயங்கரமான ஒரு நிலைமையிலிருந்தான். 74. நான் அவனை அப்படியேப் பற்றிப் பிடித்து உன்னால் பேச முடியுமா என்றேன். அவன் எனக்கு எந்த பதிலும் கூறவில்லை எனவே அந்த ஊழியக்காரர் கீழேக் குனிந்தார். அவர்களிடத்தில் எப்படி இடைபட வேண்டுமென்று அவர் அதிகமாய் அறிந்திருந்தார். அவர் அவனிடத்தில் நீ யார் என்று கேட்டார். 75. கடைசியில் அவன் பேசும்படியான அளவிற்கு அவனை அவர் தூண்டிவிட்டார் அவன் நீ குடிக்க வாங்கிக் கொடுத்தால் பேசுவேன் என்றான். அவன் முதல்வனாய் இருந்த அந்த வங்கியை அவன் சுட்டிக்காட்டினான் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். 76. அவர் சொன்னார் நாங்கள் பிரசங்கிமார்கள் என்ன சம்பவித்தது என்று உன்னால் கூற முடியுமா என்று. நீ எனக்கு மதுபானம் வாங்கித் தருவேன் என்று வாக்களித்தால் முடியும் என்றான் நாங்கள் அதைச் செய்ய முடியாது என்னால் உன்னுடைய வருத்தங்களோடு வருத்தத்தை சேர்க்க முடியாது நான் உனக்கு உதவிச் செய்ய விரும்புகிறேன் என்று கூறினார். 77. அவனுடைய எல்லாக் கதையும் இது தான். ஒரு நாள் இரவு அவன் வீட்டிற்கு வந்தானாம் அவன் கூறினபடியே அங்கே ஒரு அன்புள்ள ஜான் என்ற கடிதம் மேஜையின் மேல் அவனுடைய மனைவி வைத்துப் போயிருக்கிறாள். அவன் அவளை நேசித்தான். அவனுடைய பிள்ளைகளை அவள் கொண்டு போய் விட்டாள். அவனை அவள் விவாகரத்து செய்து விட்டு இன்னொரு மனிதனோடு ஓடிப் போய் விட்டாள். 78. அவன் சொன்னான் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்னுடைய மூளையைத் துப்பாக்கியில் சுடுவதா அல்லது என்னென்றே எனக்கு தெரியவில்லை. நான் மதுகடைக்குச் சென்றேன் என்றான். அந்த நேரம் முதற்கொண்டு அவன் அங்கே இருந்தான். அது உலக முழுவதுமாக அப்படியிருக்கிறது. 79. நீங்கள் பொய்யன் ஒருவனை எடுக்கலாம். நான் ஒரு மனிதனிடத்தில் கூறினது போன்று. ஒரு நாள் நான் ஏதோ ஹாசியம் கூறுவதாக நினைத்தேன். அவன் அத்தனைப் பொய்களைக் கூறிக் கொண்டே போய்க் கடைசியில் அவனே அவைகளை உண்மையென்று விசுவாசிக்கும் அளவுக்கு ஆயிற்று என்பதாய்க் கண்டறிந்தோம் நான் அவனிடத்தில் உன்னை அதைச் செய்ய வைத்தது தான் என்ன என்றேன். நான் பேசும்படி அவனோடு உட்கார்ந்தேன். நான் உன்னைக் கேட்கப் போகிறேன் அந்தக் கதைகளெல்லாம் ஜனங்கள் விசுவாசிப்பதற்கு மிகவும் காட்டுத்தனமாயிருக்கிறதே என்று நான் கூறினேன். 80. முதலாவது ஒன்றை என்னால் ஞாபகப்படுத்திக் கூற முடியும் என்றால் நான் நல்ல வீட்டில் சிறு பையன் இருந்தது முதல் வளர்க்கப்பட்டேன். நான் வெளியே போய்ச் சோலப்பட்டுச் சிகரெட்டுக்களை சமத்தாக இருக்க வேண்டிப் புகைத்தேன். அந்த வாசனையை நீக்குவதற்காக காப்பிச் சாப்பிட்டேன் நான் அதை என் வீட்டிற்குப் பின்னாக இருக்கும் புகை போக்கியின் பின்னாகச் செய்தேன். 81. என் தாயார் என்னைப் பிடித்துக் கொண்டு மகனே உன்னுடைய சுவாசத்தை நான் நுகரட்டும் என்று கூறினதை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன் நான் அவளுடைய முகத்தில் ஊதினேன் அதற்கு அவள் நீ காப்பி சாப்பிட்டிருக்கிறாய் வேறு ஏதோ வாசனையை எடுத்துப் போடும்படியாய் சாப்பிட்டிருக்கிறாய் நீ என்ன செய்துக் கொண்டிருந்தாய் நீ சிகரெட்டுக்கள் புகைத்துக் கொண்டிருந்தாயா-? என்றாள். 82. அவன் அதற்கு ஏதோ காரியம் என்னிடத்தில் அவளிடத்தில் உண்மையைக் கூறு என்றது. ஆனால் நான் இல்லை அம்மா என்றேன் என்னுடைய இருதயத்தின் ஊடாக சென்றேன். நான் சிகரெட்டுகள் பிடிக்கவில்லை என்று கூறினேன். அந்த நேரம் முதற்கொண்டு அது துவங்கியது என்று கூறினான். 83. நம் எல்லாராலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது துவங்கினது என்று ஏதாவது காரியத்தைக் கண்டறிய முடியும் அது முதற்கொண்டு காரியங்கள் மாறி போய் விட்டது. 84. நாம் சிந்தித்துப் பார்க்கத்தக்கதாக அங்கே தகுதியான மற்றக் காரிங்கள் இருக்கின்றன ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காரியங்களைச் செய்ய நல்ல உள்நோக்கத்தை உடைய மனிதர்கள் காரியங்களைப் புதுவிதமாய்த் துவக்க முயற்சிக்கிறார்கள். 85. உதாரணமாக பெஞ்சமின் ப்ராங்க்ளின்(Beniamine Franklin) முதலாவதாக மின்சாரத்தைக் கண்டுபிடித்த போது அவர்களால் அதை ஜெயிக்க முடிந்தது இந்த நேரம் முதற்கொண்டு இனி ஒரு போதும் யுத்தங்கள் உண்டாகப் போகிறதில்லை. ஏனென்றால் இந்த மின்சாரத்தை வேலிகளில் பாய்ச்சினால் அந்த அதிக அளவில் மின்சாரத்தை எந்த ஒரு மனிதனாலும் கடக்கவே முடியாது என்று அவர்கள் சொல்லிக் கொள்ளத் துவங்கினார்கள். அவர்கள் நன்றாய் தான் எண்ணினர். 86. முதலாம் உலக யுத்தத்துக்கு உடனேயே கெய்சர் வில்ஹெல்ம் (Kaiser Wilhelm) சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டவுடனே நமக்கு இங்கே அமெரிக்காவில் கூறப்பட்டது. நான் ஒரு ஒன்பது வயது பையனாக இருந்தேன் ஆனால் எல்லா ஜனங்களும் நமக்கு இன்னொரு யுத்தம் இருக்கவே இருக்காது இந்த நேரம் முதற்கொண்டு அது என்றென்றைக்குமாய் தீர்ந்து விட்டது என்று கூறிக் கொண்டு இருந்ததை என்னால் நினைவு கூர முடிகிறது. ஆனால் நமக்கு இன்னொரு யுத்தம் உண்டாயிருந்தது. 87. மகத்தான ஐக்கிய நாடுகள் அல்லது நான் சொல்லுவேன் அதற்கு முன்பாக அவர்கள் தேசங்களின் சங்கம் என்று அழைக்கப்படும் ஒன்றை உருவாக்கினார்கள், அவர்கள் இப்பொழுது நமக்கு இனிமேல் யுத்தங்கள் இருக்காது ஏனென்றால் நமக்கு ஒரு தேசங்களின் சங்கம் இருக்கிறது. அது உலகத்தை வலம் வந்து பாதுகாத்து கொள்ளும் எங்கேயாவது சண்டை எழும்பினால் எல்லா தேசங்களில் இருந்தும் வந்துள்ள மனிதர்கள் அங்கே ஒழுங்கை காத்துக் கொள்வார்கள். ஆனால் அது ஒரு தோல்வியாக ஆயிற்று அவர்களுக்குத் தொடர்ந்து சண்டை இருந்து கொண்டே இருந்தது. ஐக்கிய நாடுகளும் அதே காரியமாக ஆகும். 88. நாளை இரவு அல்லது ஞாயிறு இரவு ஒரு அபாயம் முன்னறிவிக்கப்பட்டது. பியர்ல் துறைமுகத்தை சரியாக இன்னின்ன நேரத்தில் ஆகாய விமானம் மூலமாக குண்டு வீசப்படும் என்று முன்னறிவித்த மனிதனே ஞாயிறு இரவு 12 மணிக்கு அமெரிக்க ஜனங்களில் 75 சதவிகிதமானவர்கள் சாம்பலாகி விடுவார்கள். அதாவது வருகின்ற ஞாயிறு இரவு 12 மணிக்கு ருஷ்யா, அமெரிக்காவின் மீது குண்டு வீசும் என்று முன்னறிவித்தான் பியர்ல் துறைமுக (Pearl Harbor) தாக்குதலை முன்னறிவித்த அதே நபர் இதையும் கூறினான். 89. அவர்கள் அதை அறிவிக்கவேயில்லை ஏனென்றால் ஜனங்களுக்குப் பீதி உண்டாகும். நான் அதை விசுவாசிப்பதில்லை புரிகின்றதா? விசுவாசிப்பதில்லை. ஏனென்றால் அணுகுண்டு யுத்தத்தை அதனால் தாங்க முடியாது அவர்களுடைய பாதையில் ஒன்று ஒளி தடை ரீதியின் ஊடாக இந்த வழியாக இருக்கிறது நாம் அவைகளை அந்த வழியாக எறிவோம். உலகமானது துண்டங்களாகி விழும் ஏதோ காரியம் சம்பவித்தாக வேண்டும் இருந்தாலும் இயேசு வருவதற்கு முன்னர் அது சரி. 90. உதாரணமாக வாலிபமான திருமண ஜோடிகள் அவர்கள் மணந்து கொண்டதான ஒரு குறிப்பிட்ட நேரம் அங்கே இருந்தது அவர்களுடைய பிரமாணங்களை ஒன்று சேர்க்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் அவர்களுடைய உத்தமத்தை, சத்தியம் செய்கின்றனர். 91. அவர்கள் நாங்கள் இருவரும் உயிரோடு இருக்குமளவும் நேசிப்போம் கனம் பண்ணுவோம் ஒருவரை ஒருவர் மனதில் வைத்துப் போற்றுவோம். ஆனால் ஏதோ காரியம் சம்பவித்ததான ஒரு நேரம் அங்கே வரும் 92. இந்த காரியங்களெல்லாம் அங்கே இருக்கின்றது ஏதோ காரியம் சம்பவித்ததான ஒரு நேரம் அங்கே இருக்கிறது ஒருக்கால் அவர்களுடைய எல்லா சத்தியப் பிரமாணங்களையும் தேசங்களின் சங்கம் முதலானவைகளுக்கு ஒருக்கால் நல்ல உள் நோக்கம் இருந்திருக்கலாம் ஆனால் அவைகளெல்லாம் ஒரு முடிவுக்கு வருகின்றது. எல்லாம் உடைந்து நொருங்கி மனிதனின் கால்களுக்கு கீழாக போய் விடுகிறது. 93. நமக்கு இருக்கக்கூடிய எல்லா நல்ல உள்நோக்கங்களும் இருக்கலாம் ஆனால் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ஆனால் அங்கே ஒரு நேரம் இருக்கிறது அப்பொழுது மனிதனால் ஏதாவது நித்தியமான காரியத்துக்கு வர முடியும். அது எப்பொழுதென்றால் மனிதன் தேவனை சந்திக்கின்றதான நேரமாகும். அப்பொழுது தான் ஏதோ காரியம் சம்பவிக்கும். அது நித்தியமாயிருக்கும். 94. நாம் தவறுகள் செய்கிறோம் புதுவருட இரவன்று நாம் பிரமாணங்களைச் செய்கிறோம். அடுத்த நாளே அதை உடைக்கும்படியாய் எடுக்கிறோம் நாம் புதிய பக்கங்களைத் திருப்புகிறோம் நாம் பிரமாணங்களைச் செய்வதாக சொல்லுகிறோம். நாம் ஆசாரியரிடத்துக்குப் போகிறோம் நாமல்ல ஆனால் கத்தோலிக்கர்கள் செய்கிறார்கள் அறிக்கைகள் செய்கிறார்கள். பிரமாணங்களைக் கையெழுத்து இடுகிறார்கள் பீடத்தண்டைக்கு நாம் வந்து புதிய பக்கங்களைத் திருப்புகிறோம். ஆனால் எல்லாம் வீணிலே போகிறது. 95. அடுத்த முறை யாராவது நம்முடைய பாதையில் குறுக்கே வந்தால் அல்லது ஏதாவது காரியம் வந்தால் அந்தப் பழைய கோபம் அப்படியே பறந்து திரும்பி வரும். நாம் தொல்லைக்குள்ளாக அல்லது ஏதோ காரியத்துக்குள்ளாக ஒவ்வொரு முறை போகும் போதும் அது மீண்டுமாய் சம்பவிக்கும். 96. ஆனால் அங்கே ஒரு இடம் இருக்கிறது ஒரு மனிதனால் அங்கே ஒரு நேரத்திற்கு வர முடியும். அது அவனை என்றென்றைக்குமாய் நித்தியமானதற்கு மாற்றி விடும் என்னிடத்தில் வருகிறவனை நான் ஒரு போதும் புறம்பே தள்ளேன் என்று இயேசு கூறினார், ஒரு மனிதன் தேவனிடத்தில் வரலாம் அவனுடைய முழுமையான நித்தியமான சேரும் இடம் மாறுகிறது. ஒரு மனிதன் தேவனை சந்திக்கலாம். அதன் பிறகு அதே விதமாய் ஒரு போதும் அவனால் இருக்கவே முடியாது. 97. உங்களால் தேவனை சந்தித்து, நீங்கள் இருந்தது போன்ற விதமாகவே என்றென்றைக்கும் இருக்க முடியாது நீங்கள் அவரை விட்டுத் திரும்புவீர்களே ஆனால் முன்னர் இருந்ததைக் காட்டிலும் மோசமானவர்களாக இருப்பீர்கள் நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டால் நீங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாய் இருப்பீர்கள், அவருடைய வாக்குத்தத்தத்தினால் கடைசி நாளில் அவனை அவர் எழுப்புவார். 98. அங்கே ஒரு நேரம் இருந்தது அப்பொழுது ஆபிரகாம் என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதன் அங்கே இருந்தான். அவன் கல்தேயருடைய தேசத்தில் இருந்து வெளியே.., அவன், ஊர் என்ற ஒரு பட்டணத்தில் வாசமாயிருந்தான். அவன் ஒரு நீதிமானும் ஒரு நல்ல மனிதனுமாயிருந்தான். 99. ஒரு வேளை அவன் அவனுடைய தகப்பன் ஒருக்கால் விக்கிரகங்களை ஆராதித்திருக்கலாம். ஏனென்றால் அவர்கள் பாபிலோனிலிருந்து வந்தவர்கள். அவன் ஒரு சாதாரண மனிதனாயிருந்தான். அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. அவன் 75-வயதும் அவனுடைய மனைவி 65-வயதுமாய் இருந்தார்கள். 100. ஒரு நாள் ஆபிரகாம் வெளிகளில் வேட்டையாடிக் கொண்டிருந்த பொழுது அல்லது வேறு எதோ செய்து கொண்டிருந்த போது ஒரு வேளை பெரிபழங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் பொழுது அல்லது அவனுடைய வேலை என்னவாய் இருந்தாலும் அவன் தேவனை சந்தித்தான் அந்த நேரம் முதற்கொண்டு அவன் மாறி விட்டான். 101. இல்லாத காரியங்களை அவனால் இருப்பது போன்று அழைக்க முடிந்தது. ஏனென்றால் அவன் தேவனை சந்தித்தான். அவன் தேவனை சந்தித்ததான மணி வேளையையும் நிமிஷத்தையும் அவன் அறிந்திருந்தான் அது அவனை மாற்றியது அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாயிருக்கும்படி தேவன் அவனை அழைத்தார். அவன் தேவனை விசுவாசித்தான் அவருடைய வாக்குத்தத்தை விசுவாசித்தான் ஏனென்றால் அவன் தேவனை சந்தித்திருந்தான். 102. 25-வருடங்களுக்குப் பின்னர் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தினர். அவரை விவாதிக்க அவரிடத்தில் தவறான ஏதோ காரியத்தை விசுவாசித்ததாக கூறும்படி முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் வேதம் கூறுகின்றது. தேவனுக்கு மகிமையை செலுத்தி எல்லா நேரத்திலும் வல்லவனானான் என்று ஏனென்றால் தேவன் அவருடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதை அவன் அறிந்தவனாய் இருந்தான். 103. ஒரு மனிதன் தேவனை சந்தித்தபோது அப்படியாய் இருக்கிறது அவனுடைய உண்டாக்கப்பட்டதையே அது மாற்றுகிறது. அது அவனுக்கு ஒரு மேம்பட்ட புலனைக் கொடுக்கிறது. அன்றொரு இரவு நான் பேசிக் கொண்டிருந்தது போன்று இயற்கையான மனிதனுக்கு மட்டும் தான் ஐம்புலன்கள் இருக்கிறது, ஆனால் விசுவாசிக்கோ அவன் தேவனை சந்தித்த பொழுது அவன் ஏதோ வித்தியாசமான காரியத்தைப் பெற்றுக் கொள்ளுகிறான் அது எல்லா நிழல்களுக்கும் மேலாக அவனை உயர்த்துகிற ஒரு மேம்பட்ட புலனாக இருக்கிறது 104. நிறைவேறுதலுக்கு வரமுடியாத காரியங்களை அவன் விசுவாசிக்கும்படி அது செய்கிறது. அவைகள் நிறைவேறும் என்று அவன் இன்னமும் விசுவாசிக்கிறான் ஏனென்றால் தேவன் அவ்வண்ணமாய்க் கூறியிருக்கிறார். ஒருமனிதன் தேவனை சந்திக்கும் பொழுது ஏதோ காரியம் சம்பவிக்கிறது. 105. அங்கே ஒரு நேரம் இருந்தது அப்பொழுது எல்லா ஞானத்திலும் தேவனுடைய வார்த்தையின் எல்லா வேத சாஸ்திரத்திலும் ஒரு மனிதன் பயிற்று விக்கப்பட்டான். அவன் அதை எழுத்தின்படியாய் அறிந்திருந்தான் அவன் பள்ளியில் போதிக்கப்பட்ட வனாயிருந்தான். அவன் எல்லாப் பட்டங்களையும் உடையவனாயிருந்தான். 106. அவன் அவ்வளவு சாமர்த்தியம் உள்ளவனாய் எகிப்தின் பண்டிதர்களுக்கும் அவர்களுடைய போதகர்களுக்கும் போதிக்கும் அளவில் இருந்தான் அவன் அதெல்லாவற்றையும் எழுத்தின்படியாய் அறிந்திருந்தான் ஆனால் அதனோடு அவன் ஒரு கோழையாயிருந்து.., அது தான் ஓடிப்போகுதல் அங்கே வெளியே சென்று வனாந்தரத்திற்குப் பின்னால் ஒரு அந்நியனுக்காக ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான். 107. ஆனால் அங்கே ஒரு நேரம் வந்தது அப்பொழுது தேவன் அங்கே அவனைப் பற்றியெரியும் புதரிலே சந்தித்தார் தேவனோடு முகமுகமாய் சந்தித்து, அதற்கு மேல் அவனால் அதே விதமாய் இருக்க முடியாது 108. ஒரு மனிதனாவது அல்லது ஸ்திரீயாவது நீங்கள் எத்தனை சத்தியவாக்குப் பண்ணியிருந்தாலும் அல்லது எத்தனைப்பக்கங்களை நீங்கள் திருப்பியிருந்தாலும் எனக்கு அக்கறை இல்லை நீங்கள் தேவனை சந்திக்கும் வரையிலும் உங்களால் மாறிப்போக முடியாது ஆனால் நீங்கள் தேவனை ஒரு முறை சந்திக்கும் போது அப்பொழுது நீங்கள் என்றென்றைக்குமாய் மாறிப் போவீர்கள். 109. மோசேயை மாத்திரம் மாற்றவில்லை இஸ்ரவேலை அது மாற்றியது. அது எகிப்தை மாற்றியது. அந்த நேரத்தில் அது உலகத்தை மாற்றியது. ஏனென்றால் ஒரு மனிதன் தேவனை சந்தித்து அவருடைய வார்த்தையின் பேரில் அவரை ஏற்றுக் கொண்டான். 110. இன்றைக்கு நமக்கு என்னத் தேவையென்றால் தேவனை முக முகமாய் சந்தித்து சூழ்நிலையை அவரிடத்தில் பேசக் கூடிய யாராவது தேவையாயிருக்கிறது மனிதர்கள் தேவனை சந்திக்கும் போது காரியங்கள் மாறுகிறது நிச்சயமாக அந்த ஒரே விதமாகத்தான் நாம் காரியங்களை உடையவர்களாயிருக்க வேண்டும். 111. அந்த நேரம் முதற்கொண்டு கோழையான மோசே ஓடிப்போய்க் கொண்டிருந்த, ஒருவனான மோசே மாற்றப்பட்டான். அந்த நேரம் முதற்கொண்டு அவன் கர்த்தருடைய ஊழியக்காரன் ஆனான் அது எப்பொழுதும் அந்த விதமாகத்தான் கிரியை செய்கிறது ஒரு மனிதன் தேவனை சந்திக்கும் பொழுது காரியங்கள் மாறுகிறது. 112. ஒரு சமயம் ஒரு பதினெட்டு வயதுக்கூட நிரம்பாத சிறு பெண் அல்லது அவ்வளவு வயதாய் அல்ல அங்கே இருந்தாள். அது அவள் கிணற்றுக்குப் போய்க் கொண்டிருக்கிறப் பாதையிலே காலையில் ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வரும்படியாய் நாசரேத்தில் போய்கொண்டிருந்தாள். 113. அவள் ஒரு அருமையானப் பெண் அவள் விசுவாசித்தாள் அவளிடம் விசுவாசம் இருந்தது. ஆனால் அந்தக் காலையன்று அவள் தேவனை சந்தித்தாள். தேவன், ஏதோக்காரியத்தை அவளிடத்தில் கூறினார். அவள் அதை விசுவாசித்தாள். அது அவளுடைய ஜீவிய ஓட்டத்தையே மாற்றி அவளை அழிவில்லாத வளாக்கி விட்டது அவள் பெயர் மரியாள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தாயார். 114. இந்த சிறிய அம்மாள் ஒரு சாதாரண சிறிய பெண் ஆனால் அவள் தேவனை சந்தித்தாள் அந்த நேரம் முதற்கொண்டு ஏதோக் காரியம் சம்பவித்தது நிச்சயமாக.., 115. பேதுரு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதன் அங்கே இருந்தான். ஒரு கரடு முரடான மீன் பிடிப்பவன் ஒருக்கால் அவர்களில் இருக்கக்கூடிய அவ்வளவு முரடானவன். அவன் ஒருக்கால் ஒரு கொடுமைக்காரனின் மகத்தான ஒரு கையாளாய் இருந்திருக்கலாம். 116. ஏனென்றால் இங்கே சமீபத்தில் பெரிய மீன் பிடிப்பவன் என்ற நாடகத்தைப் பார்த்தேன் பேதுருவுக்கு ஒரு நல்ல வர்ணனையாயிருக்குமென்று நினைத்தேன். ஏனென்றால் அவன் அவ்வளவு ஒரு பெரிய கரடு முரடான ஆளாயிருந்தான். அவன் எதைக் குறித்தும் கவலைப்படுவதில்லை. அவன் எதையும் விசுவாசிப்பதில்லை ஆனால் ஒரு நாள் அவன் தேவனை சந்தித்தான் அந்த நேரம் முதற்கொண்டு அவன் மாற்றப்பட்டான். அந்த நேரம் முதற் கொண்டு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஒரு அப்போஸ்தலனாக அவன் ஆனான். 117. கொஞ்சம் முனனர் சகோ.டேவிட் ட்யூப்லஸ்ஸிஸ் நம்மிடம் ஒரு கொலைக்காரனான தர்சிஸ் பட்டணத்து சவுலைப் பற்றி சொல்லிக் கொண்டு இருந்ததைப் போல அவன் கொலைக்காரர்களின் சாட்சியாக அவர்களுடைய அங்கிகளைக் காவல் காத்து இரத்த சாட்சியான ஸ்தேவானின் மரணத்திற்கு சாட்சியாய் இருந்தான் 118. சபைகளின் தலைமை ஆலோசனை சங்கங்களுக்கு சென்று அதிகப்படியான சத்தத்தையும் கூச்சலையும் போட்டு தேவனைத் துதிக்கின்றவர்களைக் கைது செய்வதற்கு அதிகாரக் கடிதங்களை அவனுடைய ஜோபியில் வைத்திருந்தான். 119. பரிசேயருடைய பார்வையில் அவன் ஒரு மகத்தான மனிதனாயிருந்தான் அவன் பரிசேயர்களில் பரிசேயனாயிருந்தான் ஆனால் ஒரு நாள் அவன் தமஸ்குவுக்குப் போகிற பாதையிலே அவன் தேவனை சந்தித்தான் அவனைச் சுற்றிலுமாய் ஒரு வெளிச்சம் பிரகாசித்தது, அந்த நேரம் முதற்கொண்டு அவன் தர்சிஸ் பட்டணத்து சவுலாக அதற்கு மேல் இல்லாதிருந்தான். ஆனால் அவன் பவுலாகிய தாழ்மையான ஒருவனாய் சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் ஏனென்றால் அவன் தேவனை சந்தித்தான் அது அவனை மாற்றியது. 120. அங்கே ஒரு குஷ்டரோகி வாயிலில் படுத்துகிடந்தான் மருந்துகளின் எல்லாப் பரிகாரங்களாலும் அவனை குணப்படுத்த முடியவில்லை. அவனுடைய சீழ் பிதுக்கப்படாத புண்கள் அவனுடைய கரங்களை உயர்த்த முடியாத அளவுக்கு அவவளவு பெரியதாகிவிட்டது அவனுடைய கால்களை அவனால் இழுக்கவே முடியவில்லை . 121. அவனுடைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது ஆனால் அவன் ஒரு நாள் தேவனை சந்தித்தான். வாசலை விட்டு வெளியே வந்த போது அவன் கீழே விழுந்து ஆராதித்து உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான் அதற்கு அவர் எனக்கு சித்தமுன்டு நீ சுத்தமாகு என்றார். அந்த நேரம் முதற்கொண்டு அவனுக்கு அதற்கு மேல் குஷ்டரோகம் வரவேயில்லை. ஏனென்றால் அவன் தேவனை சந்தித்தான். 122. வீதியின் ஓரமாக அங்கே ஒரு குருடான மனிதன் உட்கார்ந்திருந்தான் இருட்டிலிருந்து பகல் வெளிச்சத்தை அவனால் காண முடியாதிருந்தான், அவனுக்கு உதவி செய்ய அங்கே ஒரு காரியமுமில்லை. 123. ஒரு நாள் எரிகோ பட்டணத்திலிருந்து யாரோ ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவன் தேவனை சந்தித்தான். அந்த நேரம் முதற் கொண்டு அவனால் காண முடிந்தது. 124. வெளிச்சத்தின் பார்வை அவனுடைய கண்களுக்குள்ளாக உடைத்துக்கொண்டு சென்று அவனால் மீண்டும் காண முடிந்தது. ஏனென்றால் அந்த நேரம் முதற் கொண்டு அவன் இயேசுவை சந்தித்த பொழுது அவன் ஒரு வித்தியாசமான மனிதனாய் இருந்தான். 125. ஒரு நபர் தேவனை சந்திக்கும் பொழுது ஏதாவது காரியம் நிச்சயமாய் சம்பவிக்கிறது. 126. ஒரு சமயம் அங்கே ஒரு வாலிப மனிதனிருந்தான். அவன் நாட்டின் ஒரு நல்ல குடிமகனாக இருந்தான் என்பதில் சந்தேகமில்லை ஆனால் அவன் மேல் ஒரு ஆவேசம் வரும். அவனுக்கு அவ்வளவு மோசமாகி சிறைச்சாலையிலே அவனை இருக்கவைக்கக் கூடாமற் போயிற்று. அவர்கள் அவனை சங்கிலிகளால் கட்டி வைத்தார்கள். அவனுக்குள்ளாக பிசாசுகளின் கூட்டம் இருந்தது. அந்த சங்கிலிகளை அவன் உடைத்துக் கொண்டு தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளுவான் 127. பிசாசுகள். அவனை கல்லறை மைதானத்துக்குக் கொண்டு போயின. அங்கே அவன் தங்கியிருந்தான். அவன் கற்களை எடுத்து அவ்வளவு மோசமாகி தன்னைத் தானே கீறிக்கொள்வான். ஓ....ஓ.....ஓ...ஓ..... அவன் ஒரு பயங்கரமானவனாயிருந்தான். 128. அந்த ஆவேசம் அவனை விட்டவுடனே நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று அவன் நினைப்பான் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்டதான நேரத்தில் பிசாசுகள் அவனிடத்தில் திரும்பி வரும் அவன் தன்னைக் கீறிக்கொள்ளவும் கிழித்துக் கொள்ளவும் செய்வான் 129. ஆனால் ஒரு நாள் அவன் இயேசுவை சந்தித்தான் அந்த நேரம் முதற்கொண்டு அந்த கதரேனேயில் இருந்த பிசாசு பிடித்தவன் அவனுடைய சரியான சிந்தைக்கு வந்து உடை உடுத்தி அவருடைய பாதத்தண்டை உட்கார்ந்துக் கொண்டிருந்தான். 130. ஒரு நல்ல மனிதனாக அவன் தன் வீட்டிற்குப் போகக் கூடியவனாயிருந்தான். அவன் நாகரீகத்துக்குத் திரும்பிப் போகக் கூடியவனாயிருந்தான் அவனை நேசித்தவர்களிடத்தில் திரும்பிப் போகக் கூடியவனாயிருந்தான் அந்த நேரம் முதற்கொண்டு நான் மாறிப் போனேன் என்று சொல்லக் கூடியவனாயிருந்தான். ஆம். 131. ஒரு நாள் அங்கே கல்வாரியின் மேல் தேவனும் மரணமும் முகமுகமாய் சந்தித்த பொழுது ஜீவனும் மரணமும் ஒன்று சேர்ந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் ஜீவனானது கிறிஸ்துவானவர் மரணத்தின் கூரை பிடுங்கி எடுத்தார். அந்த நேரம் முதற்கொண்டு மரணமானது தனக்குள்ளாக கூரை உடையதாயில்லை. அதைக் குறித்து நான் அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன். 132. தேவனே... மரணமும் தேவனும் ஒன்று சேர்ந்து சந்தித்தது. மரணம் அதே விதமாக இல்லை இப்பொழுது அது கூரை உடையதாயில்லை 133. கிறிஸ்தவ விசுவாசியானவன் அதன் முகத்துக்கு நேராக நடந்து சென்று ஓ மரணமே உன் கூர் எங்கே-? பாதளமே உன் ஜெயம் எங்கே-? என்று கூற முடியும். ஏன்-? அவைகள் இரண்டும் தேவனை சந்தித்தது. அது முதற்கொண்டு அவைகள் அதே விதமாக இல்லை. 134. அது ஒரு முறை தேவனை சந்தித்த போது எந்த மனிதனும் அதே விதமாய் இருக்கமுடியாது. எந்த ஒரு காரியமும் அதே விதமாய் இருக்க முடியாது. நீங்கள் ஒரு போதும் அதே விதமாய் இருக்க முடியாது. 135. இங்கே ஆஸ்பத்திரிப் படுக்கையில் படுத்துக் கிடந்ததை என்னால் நினைவு கூர முடியும். நான் ஜீவிக்க வைத்தியர்கள் மூன்றே நிமிஷங்கள் கொடுத்தார்கள். ஒரு நிமிஷத்துக்கு என்னுடைய இருதயத்துடிப்பு 17 முறைகளாயிருந்தது. நான் தேவனை சந்தித்தேன். அது முதற்கொண்டு நான் அதே விதமாக இல்லை. 136. ஏதோ காரியம் எனக்கு சம்பவித்தது வித்தியாசமான எதையும் ஒருவராலும் என்னிடம் கூற முடியவில்லை. பில் பிரன்ஹாம் மரித்துப் போனான். நான் தேவனை சந்தித்தேன். ஏதோ காரியம் எனக்குள்ளாக வந்தது. நான் அவரை சந்தித்த அந்த நிமிடம் முதற்கொண்டு நான் ஒரு போதும் அதே மாதிரியாய் இருந்ததில்லை. அவர் என்னை மாற்றி விட்டார் அவர் என்னை ஏதோ வித்தயாசமான காரியமாய் ஆக்கிவிட்டார் அது ஏதோ ஒரு புதிய வருட பிரமாணத்தை எடுத்துக்கொள்வதல்ல ஆனால் நான் தேவனை சந்தித்தேன். 137. புருஷர்களே, ஸ்திரீகளே, நீங்கள் தேவனை சந்திக்கும் பொழுது நீங்கள் மாறி விடுகிறீர்கள் இன்றிரவு நாம் நம்முடையப் புதிய வருட பிரமாணங்களைச் செய்கிறோம். அவைகளை உடைக்க அடுத்த நாள் காலையிலேத் திரும்பிப் போகிறோம் ஆனால் நாம் என்ன செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம் என்றால் ஒரு புதிய வருடப் பிரமாணம் அல்ல ஆனால் முகமுகமாய் நாம் தேவனிடத்தில் வந்து அவருடைய ஆவியினால் பிறந்திருக்கும்படியாக நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்க வேண்டும். 138. ஒரு நேரம் ஒரு வயதான மனிதனிருந்தான். அவனால் சிந்தனையில் தீர்மானிக்க முடியாதவனாயிருந்தான். பிசாசு அவனை அதில் தோற்கடித்துக் கொண்டிருந்தான் ஒரு நாள் அவன் வயல் வெளியிலே முழங்காற் படியிட்டு ஜெபித்தான் அவன் ஜெபித்துக் கொண்டிருக்கையில் அவன் ஒரு கம்பம் மட்டுமாய் ஓடிச் சென்றான். அவன் சாத்தானே இது ஒரு நினைவுச்சின்னமாக இருக்கட்டும். நீ திரும்பி எப்பொழுதாவது என்னிடத்தில் வந்தால் நான் உனக்கு, அந்தக் கம்பத்தைச் சுட்டிக் காட்டுவேன். இங்கே தான் நான் தேவனை சந்தித்தேன் என்று கூறுவேன். இந்த இடத்திலிருந்து தான் காரியம் தீர்க்கப்பட்டது என்று கூறுவேன். 139. அது தான் நமக்குத் தேவை ஒருக்கால் வயலிலிருக்கிற ஒரு கம்பமாய் இல்லாமலிருக்கலாம் ஆனால் எங்கேயோ ஏதோ இரகசியமான இடம் ஏதோ இடம் ஒரு கம்பமல்ல. 140. ஓ...ஓ...ஓ...ஓ... இன்றிரவு நூற்றுக்கணக்கான பிரமாணங்கள் எடுக்கப்படும் ஆயிரக்கணக்கானவைகள் எடுக்கப்படும் அடுத்த வருடம் நாம் மீண்டுமாக அவைகள் எல்லாவற்றையும் எடுக்க வேண்டியிருக்கும். 141. நாம் சொல்லுவோம் பொய் பேசுவதை நிறுத்திவிடுவோம் இதைச் செய்வதை நிறுத்தி விடுவோம் நம்முடையக் கோபத்தை ஒரு பக்கம் நாம் தூக்கிவைப்போம் நாம் அதிகமாக தேவனுக்குச் செய்வோம் நாம் இதை அதை அல்லது மற்றதைச் செய்வோமென்று அது வீணென் கண்டறியவே. 142. இன்றிரவு மனிதன் செய்ய வேண்டிய அவசியம் என்னவென்றால் தேவனிடத்தில் முகமுகமாய் வரவேண்டும் அந்த நேரம் முதற்கொண்டு அவன் ஒரு மாற்றப்பட்ட சிருஷ்டியாயிருக்கிறான் அல்லேலூயா. 143. ஓ...ஓ...ஓ....ஓ.... நான் அதை விசுவாசிக்கின்ற விதமாய்க் கூறவேண்டுமென்று விரும்புகிறேன் ஆனால் ஒரு மனிதன் தேவனைச் சந்திக்கும் பொழுது அந்த நிமிடம் முதற்கொண்டு அவனுடைய ஜீவியத்தின் எஞ்சியுள்ள நாட்களெல்லாம் அவன் மாறிவிட்டான் அவன் அதே விதமாய் ஒரு போதும் இருக்கமாட்டான். ஏனென்றால் அவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான். 144. அவன் ஒரு புதிய சிருஷ்டியாயிருக்கிறான். பழையக்காரியங்கள் கடந்து போய் விட்டது எல்லாக் காரியங்களும் அவனுக்குப் புதியதாயின. அவன் ஒரு புதியதாய்க் காணப்படுகிறான் 145. வைத்தியர்களால் நீ மரிக்கப் போகின்றாய் என்று கூறப்பட்டுள்ள ஒரு வியாதியான மனிதனால் தேவனுடைய முகத்துக்கு நேராய் நடந்துச் செல்ல முடியும் ஆனால் தேவனுடைய முகத்துக்கு நேராக கடந்து அவனுடைய காரியத்தை மன்றாடலாம். அவன் ஒரு வித்தியா நபராய் அந்த நேரம் முதற்கொண்டு வெளியே வருவான். 146. ஒரு சட்ட மன்ற உறுப்பினர் உப்சா ஒரு 66 வருடங்களாக உட்கார்ந்திருந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது, அந்த இரவு அங்கே கலிபோர்னியாவில் பரிசுத்த ஆவியானவர் கீழே வந்து பேசத் துவங்கினார். அவர் தேவனை சந்தித்தார். அந்த நேரம் முதற்கொண்டு கக்க தண்டங்கள் இல்லாமல் நடக்க முடிந்தது. 147. புற்று நோயால் தின்று விடப்பட்டு ஒன்றுமில்லாமல் ஒரு வெறும் நிழலாய்ப் படுத்துக்கிடந்த நேரத்தை நான் கண்டேன். வைத்தியர்கள் கடந்து போகையில் அவர்கள் போய் விட்டார்கள் என்றார்கள் அவர்களுடைய அன்பானவர்கள் அவர்களை உற்சாகப்படுத்த அவர்களால் முடிந்த கடைசி வார்த்தைகளைக் கூறும் படியாய் உள்ளே ஒன்று கூடினார்கள். ஆனால் அவர்களோ தேவனை சந்தித்த அந்த நேரம் முதற்கொண்டு அவர்கள் மாறிவிட்டார்கள் அவர்கள் வித்தியாசமாய் ஜீவிக்கிறார்கள். 148. வீதியின் மேல் அங்கே தூர என்னால் ஒரு துர்நடத்தையுள்ள ஸ்திரீயை காண முடிகின்றது நடைபாதையில் அங்கே தூர என்னால் ஒரு குடிகாரனை காண முடிகிறது. என்னால் அங்கே சபைக்குள்ளே மாய்மாலக்காரனைக் காண முடிகிறது. அந்த எல்லா வித்தியாச விதமான ஜனங்கள் ஒவ்வொரு புதிய வருஷமும் ஒரு புதிய பக்கத்தைத் திருப்புகிறார்கள் வித்தியாசமானக் காரியத்தைச் செய்ய முயற்சிக் கிறார்கள். ஈடு செய்ய முயற்சிக்கின்ற முதலானவற்றைச் செய்கிறார்கள் ஒருமுறை அவர்கள் தேவனை சந்திக்கட்டும் அது முதற்கொண்டு 149. மரண இருளின் திசையில் உட்கார்ந்திருந்த அவர்களுக்கு அது முதற்கொண்டு இயேசு பிரசங்கித்தார். 150. ஒரு மனிதனுக்கு அவன் மேல் ஒரு உண்மையான மாற்றம் வர வேண்டும் என்று விரும்பினால் இன்றிரவு நான் சொல்கிறேன். தேவனோடு அவன் முகமுகமாய் வரட்டும் ஒரு முறை சந்தித்து அப்பொழுது அவனால் அந்த நேரம் முதற் கொண்டு நான் ஒரு மாறின மனிதனானேன் என்னுடைய அனுபவத்தை நான் அறிவேன் என்றுச் சொல்ல முடியும் 151. ஒரு குறுகிய நேரத்துக்குள் சபையானது இங்கே பீடத்தைச் சுற்றிக் கூடி வரும் நீங்கள் உங்கள் ஜீவியத்தைப் புதியதாய் அர்ப்பணிப்பீர்கள் நீங்கள் காரியங்களை விட்டுக் கொடுத்து காரியங்களைப் பீடத்தின் மேல் கிடத்துவீர்கள் 152. சகோதரனே நான் உங்களுக்கு சில புத்திமதிகளைக் கொடுக்கிறேன் நீங்கள் தேவனை முகமுகமாய் சந்தித்ததே இல்லையென்றால் நான் உங்களுக்குக் காரியத்தைச் சொல்லுகிறேன் அந்தப்பீடத்தண்டைத் தரித்திருங்கள். தேவனை நீங்கள் சந்திக்கும் வரைக்கும் அங்கேயேத் தரித்திருங்கள் அப்பொழுது உங்களால் அந்தப் புதிய வருட இரவிற்கு உங்கள் விரலைச் சுட்டிகாட்ட முடியும். 153. அப்படியில்லாமல் நான் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பினேன். நான் ஒரு புதிய பிரமாணத்தை எடுத்துக் கொண்டேன் என்று கூறுவதல்ல. ஆனால் அந்த நேரம் முதற் கொண்டு நான் தேவனை சந்தித்தேன். ஜீவியம் மாற்றம் அடைந்தது. காரியங்கள் வித்தியாசமாயிருந்தது. எல்லாக்காரியங்களும் புதிதாயின எனக்கு மீண்டுமாக அந்த நேரம் முதற் கொண்டு நீங்கள் தேவனை சந்திக்கிற நேரம் முதற்கொண்டு. 154. அது ஒரு புதிய வருடத்தை சந்திப்பதல்ல இன்னும் சில நிமிஷங்களில் நாம் அதை நேரடியாய் சந்திக்கப்போகிறோம் 155. நாம் அதைப் பிரமாணங்களோடு சந்திப்போம் நாம் அதை வாக்குறுதிகளோடு சந்திப்போம் நல்ல உள்நோக்கங்களோடு நாம் அதை சந்திப்போம் ஒரு புதிய பக்கத்தைத் திருப்ப நாம் முயற்ச்சிப்போம் நாம் வித்தியாசமாய் செய்ய முயற்ச்சிப்போம் என்று கூறிக் கொண்டே நாம் அதை சந்திப்போம் அதெல்லாம் நல்லது தான். நான் அதைப் பாராட்டுகிறேன். 156. சகோதரனே முதலாவதாக நீங்கள் தேவனை சந்திக்கும் வரைக்கும் அது ஒரு பொழுதும் நித்தியமாயிருக்க முடியாது. முதலாவதாக நீங்கள் தேவனை சந்திக்கும் போது அது முதற்கொண்டு எல்லாக் காரியமும் வித்தியாசமாயிருக்கும். நாம் தலை வணங்கியிருக்கையிலே ஜெபம் செய்வோமாக. 157. தேவனுடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவே நான் உம்மை சந்தித்த நேரம் எனக்கு நினைவிருக்கிறது கர்த்தாவே ஒரு பரிதபிக்கப்படத்தக்கவனாய் ஒரு நல்ல நேர்மையான ஜீவியம் ஜீவித்து தரிக்காமல் ஓடிக் கொண்டு, குடித்துக் கொண்டும் அல்ல. சூதாடிக்கொண்டும் அல்ல புகைத்துக் கொண்டும் அல்ல முதலானவைகளைச் செய்யாமல் இருந்ததை நான் நினைவு கூருகிறேன் 158. ஆனால் எனக்குத் தெரியும் கர்த்தாவே மரணமானது திருட்டுத்தனமாக ஆஸ்பத்திரி அறைக்குள்ளாக 20 வருடங்களுக்கு முன்பாக வந்த போது அங்கே ஏதோ காரியம் என்னுடைய ஜீவியத்தில் குறைச்சலாயிருந்தது. 159. அங்கே நான் தேவனை சந்தித்தேன். அந்த முதற்கொண்டு அந்த நேரம் முதற் கொண்டு கர்த்தாவே உமக்கு சேவை செய்ய முயற்ச்சித்தேன். என்னை ஜீவியம் மாறிவிட்டது. எல்லாக்காரியமும் வித்தியாசமாய்க் காணப்படுகிறது. நான் உம்மை சந்தித்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் கர்த்தாவே... 160. இன்றிரவு புதிய வருடத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்க ஜீவிக்கின்ற தேவனுடைய ஆவியை என்னுடையதில் இருக்க என்னால் அதை சந்திக்க முடியும் என்று கூற நான் சந்தோஷப்படுகிறேன் 161. எங்களுக்கு அனுபவங்களைத் தாரும் கர்த்தாவே உம்முடைய நன்மையையும் இரக்கத்தையும் எங்களுக்குத் தாரும் எங்களுடைய பாவங்களை எங்களுக்கு மன்னியும் இந்த வருகின்ற வருடத்தினூடாக ஓ...ஓ....ஓ....ஓ.... தேவனாகிய கர்த்தாவே நாங்கள் உம்மை சந்தித்து எங்களுடைய ஜீவியங்கள் மாறிவிட்டது என்ற ஒரு அனுபவத்தோடு நாங்கள் ஜீவிக்கும்படியாய் செய்யும். 162. இதை அளியும் கர்த்தாவே எங்களுடைய குறைவுகளை மன்னியும் எங்களுக்கு உள்ளாக உம்முடைய பரிசுத்த ஆவியைப் பொருத்தும் எங்களை நடத்தும் எங்களுக்கு வழிகாட்டும். 163. பிதாவே, தேவனே, இதோ 1960-எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஒரு உலகமெங்குமான கூட்டத்துக்கு தருணங்கள் அங்கே இருக்கிறது. அதில் லட்சோப லட்ச அஞ்ஞானம மார்க்கத்தார் புறமதஸ்தர்கள் முதலானோர்கள் ஒருக்கால் உம்மிடத்தில் வரலாம் போன்று காணப்படுகின்றது. 164. ஓ... ஓ.... ஓ... ஓ... தேவனாகிய கர்த்தாவே என்னுடைய இருதயத்துக்குள் உம்முடைய ஆவியைக் கொண்டவனாய் இன்றிரவு நான் உம்முடைய பீடத்தைப் பார்த்துக் கொண்டு எனக்கு உதவிச் செய்யும் ஓ தேவனே என்னுடைய இருதயம் வைராக்கியத்தால் எரிந்து கொண்டிருக்கிது. நான் உம்மை நேசிக்கிறேன் கர்த்தாவே 165. நான் என்னையே உம்முடைய சேவையில் ஒப்புக்கொடுக்கிறேன் நீர் என்னை அனுப்ப விரும்புகின்ற எந்த இடத்திற்கும் அனுப்பும் கர்த்தாவே நீர் பேசும்.., நான் போகிறேன். 166. என்னுடைய சபையை ஆசீர்வதியும் சகோ.நெவிலை ஆசீர்வதியும் இங்கே இருக்கின்ற எல்லா ஜனங்களையும் எங்கள் வாசலுக்கு வந்த அந்நியர்களையும் ஆசீர்வதியும் இந்த நாள் சாயங்காலம் மட்டும் நேரத்துக்கு நேரம் பேசுகின்ற போதகர்கள் தேவனே அவர்களுடைய ஊழியங்களை ஆசீர்வதியும். 167. சகோ.நெவிலை ஆசீர்வதியும் சகோ.ஜீனியர் ஜாக்சனை ஆசீர்வதியும் சகோ. பீலரையும் மற்ற எல்லா ஊழியர்களையும் ஆசீர்வதியும் பிதாவே 1960-ல் எங்களுக்கு ஒரு மகத்தான வருடத்தைத் தாரும். 168. நாங்கள் கர்த்தாவே முகமுகமாய் உம்மை சந்தித்தோம் என்று அறிந்திருக்கிற நாங்கள் உம்முடைய ஆவியினால் மறுபடியுமாய் பிறந்திருப்பதென்பது என்ன என்று அறிந்திருக்கிறோம் உமக்கு, நாங்கள் சேவை செய்யும்படியாக உம்முடைய நித்தியமான கிருபையை எங்களுக்குத் தாரும் இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம் ஆமென். 169. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா-? 1960-வது வருடமானது நான் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பினேன் என்பது போன்று இருக்க விடாதீர்கள் நான் ஒரு புதிய ஜீவியத்தை துவங்க முயற்சிக்கிறேன் என்பதாக இருக்க விடாதீர்கள் ஆனால் நான் தேவனை சந்தித்தேன் அந்த நேரம் முதற்கொண்டு, அது முதலாக எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானமும் சொல்லி முடியாத மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷமும் எனக்கு உண்டாயிருந்தது எனக்கு ஒரு திருப்தி உண்டாயிருந்தது என்பதாக அது இருப்பதாக. 170. மரணமே எனக்கு வந்தாலும் கூட என்னுடைய கடைசி மூச்சுக்கு அடுத்த நிமிஷம் நான் காத்தருடைய கரங்களில் இருப்பேன் என்ன வந்தாலும் அல்லது போனாலும் எனக்கு அக்கறை இல்லை 171. ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் விரும்பினால் அவளை வெடிக்கச் செய்யட்டும். அவர்கள் விரும்புகிறார்கள் ஆனால் நாம் மகிமையில் அவரோடு போகும் வரைக்கும் குண்டுகளால் ஊடாக பாய்ந்து வெடிக்க முடியாது. ஆமேன் நம்மை சேதப்படுத்த அங்கே ஒன்றுமே இல்லை. அல்லேலூயா. 172. நான் தேவனை சந்தித்தேன் நான் அவ்வளவு சந்தோஷமாயிருக்கிறேன் அந்த நேரம் முதற்கொண்டு என்று என்னால் கூற முடிந்தால் நான் சந்தோஷப்படுகிறேன் அந்த இடத்தில் அதை அப்படியே வையுங்கள் நான் தேவனை சந்தித்த பொழுது எனக்கு ஏதோ காரியம் சம்பவித்தது அந்த நிமிடம் முதற்கொண்டு நான் மாற்றப்பட்டேன் அது முதற்கொண்டு நான் மாற்றப்பட்டேன். 173. தேவனுடைய மகிமைக்கும் வல்லமைக்கும் ஒரு சாட்சியாயிருக்கும்படி இன்றிரவு இந்தப் பாதையில் இருப்பதற்காக நான் அவ்வளவு சந்தோஷப்படுகிறேன் இங்கே இருக்கின்ற ஏதோ ஒரு பழைய காரியம் தேவன் அங்கே இறங்கிக் கீழே வந்து அவருடைய கிருபையை எனக்கு கொடுத்து என்னை இரட்சித்தார். என்னை சுகப்படுத்தினார். அவருடைய ஆவியினால் என்னை நிரப்பினார். நான் அவருடைய கவிசேஷத்தைப் பிரசங்கிக்கட்டும் அது உலகத்திலேயே மகத்தான கனம் பொருந்தியதாய் இருக்கிறது. 174. அந்த நேரம் முதற்கொண்டு இந்த நேரம் வரைக்குமாய் நான் ஒருமுறை கூட வருந்தினதே இல்லை ஆனால் இந்த நாட்களில் எல்லாம் நன்றி உள்ளவனாய் இருந்தேன். எல்லா நித்தியத்தினூடாகவும் நான் தேவனை சந்தித்ததற்காக நன்றி உள்ளவனாயிருப்பேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சரி. சகோதரன் நெவில்..... *******